Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 04 அக்டோபர் (ஹி.ச.)
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, தேசியக் கொடியை காக்க தனது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர் திருப்பூர் குமரனின் 122-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தேசியக் கொடியை காக்க தன் இன்னுயிரையே தியாகம் செய்த மாவீரர் திருப்பூர் கொடி காத்த குமரனின் பிறந்தநாள் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக இளம் வயதிலேயே துணிந்து போராடி உயிர்த்தியாகம் செய்த அமரர் திருப்பூர் குமரனின் வீரமும், தியாகமும் என்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA