குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் தரும் பயிர்கள் – விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியது!
தமிழ்நாடு, 04 அக்டோபர் (ஹி.ச.) தண்ணீர் பற்றாக்குறை என்பது விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக மழைப்பொழிவு குறைவாக இருக்கும் பகுதிகளில், குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி நல்ல மகசூல் பெறக்கூடிய பயிர்களைத் தேர்வு செய்
Farmers water


தமிழ்நாடு, 04 அக்டோபர் (ஹி.ச.)

தண்ணீர் பற்றாக்குறை என்பது விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக மழைப்பொழிவு குறைவாக இருக்கும் பகுதிகளில், குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி நல்ல மகசூல் பெறக்கூடிய பயிர்களைத் தேர்வு செய்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பயிரின் தன்மை, மண் வகை, பருவநிலை மற்றும் சந்தை தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சாகுபடி திட்டமிடுவதன் மூலம் தண்ணீர் பயன்பாட்டை குறைக்க முடியும்.

சிறுதானியங்களுக்கு அதிக வாய்ப்பு

கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானியங்கள் குறைந்த தண்ணீரிலும் வளரக்கூடிய பயிர்களாக உள்ளன.

குறிப்பாக வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்ட இப்பயிர்கள் மானாவாரி நிலங்களிலும் சாகுபடி செய்ய ஏற்றதாக உள்ளன.

சிறுதானியங்களுக்கு தற்போது சந்தையில் அதிகரித்து வரும் தேவையையும் விவசாயிகள் கருத்தில் கொள்ளலாம்.

குறிப்பாக உளுந்து, பாசிப்பயறு, துவரை, கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகளையும் குறைந்த நீர் வசதியுள்ள பகுதிகளில் தேர்வு செய்யலாம்.

குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும் சில பயறு வகைகள் மூலம் குறைந்த காலத்தில் வருமானம் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

அதிலும் எண்ணெய் வித்துப் பயிர்களான

நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களும் தண்ணீர் பயன்பாட்டை கட்டுப்படுத்தி சாகுபடி செய்யக்கூடிய பயிர்களில் அடங்கும்.

குறிப்பாக எள் குறைந்த நீர் தேவையுடன் வளரக்கூடியதாக இருப்பதால், மழைப்பொழிவு மற்றும் மண் தன்மைக்கு ஏற்றவாறு விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.

தண்ணீரை சேமிக்கும் தொழில்நுட்பங்கள்

குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெறுவதற்கு பயிரைத் தேர்வு செய்வதுடன், நீர் மேலாண்மைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம், வயலில் மூடாக்கு அமைத்தல் உள்ளிட்ட முறைகள் மூலம் நீர் விரயத்தை குறைக்க முடியும்.

மேலும், அந்தந்த பகுதியின் மண் மற்றும் காலநிலைக்கு ஏற்ற பயிரைத் தேர்வு செய்வது அவசியம்.

விதைப்பு செய்வதற்கு முன்பு அருகிலுள்ள வேளாண்மைத் துறை அலுவலகம் அல்லது வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆலோசனையைப் பெறுவது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Hindusthan Samachar / LOGESHWARI V