என் பெயரை பயன்படுத்தி என் வாழ்க்கைக்கு அநீதி செய்யாதீர்கள் – நடிகர் பண்ட்லா கணேஷ்
ஐதராபாத் , 05 அக்டோபர் (ஹி.ச.) தனது பெயரை பயன்படுத்தி தேவையில்லாத தகவல்களை பரப்பி, தனக்கு தொந்தரவு ஏற்படுத்த வேண்டாம் என்று பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான பண்ட்லா கணேஷ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக
A


ஐதராபாத் , 05 அக்டோபர் (ஹி.ச.)

தனது பெயரை பயன்படுத்தி தேவையில்லாத தகவல்களை பரப்பி, தனக்கு தொந்தரவு ஏற்படுத்த வேண்டாம் என்று பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான பண்ட்லா கணேஷ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

உங்கள் பொழுதுபோக்குக்காக என் பெயரை பயன்படுத்தி, என் வாழ்க்கைக்கு அநீதி செய்ய வேண்டாம். கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு எந்த பதவி அல்லது அந்தஸ்து மீதும் ஆசை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பதவிகள், பொறுப்புகள் உள்ளிட்ட எந்த விஷயங்களிலும் தனக்கு ஆர்வமோ, எதிர்பார்ப்போ கிடையாது என்றும் பண்ட்லா கணேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.

தேவையில்லாத விஷயங்களை பேசி, என் பெயரை பயன்படுத்தி எனக்கு சிரமங்களை ஏற்படுத்த வேண்டாம். மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பண்ட்லா கணேஷின் இந்த பதிவு யாரை குறிப்பிட்டு வெளியிடப்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA