பஞ்சாப்பில் பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி - படிப்பு சுற்றுலாவின் போது பரிதாபம்
கடத்துருத்தி , 05 அக்டோபர் (ஹி.ச.) கேரள மாநிலம், கடத்துருத்தியில் உள்ள கல்லூரியில் இருந்து மாணவர்கள் படிப்பு சுற்றுலாவாக பஞ்சாப்புக்கு சென்றிருந்தனர். இந்த சுற்றுலா குழுவில் கடத்துருத்தியைச் சேர்ந்த ஜோஸ்னாவும் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில
A


கடத்துருத்தி , 05 அக்டோபர் (ஹி.ச.)

கேரள மாநிலம்,

கடத்துருத்தியில் உள்ள கல்லூரியில் இருந்து மாணவர்கள் படிப்பு சுற்றுலாவாக பஞ்சாப்புக்கு சென்றிருந்தனர்.

இந்த சுற்றுலா குழுவில் கடத்துருத்தியைச் சேர்ந்த ஜோஸ்னாவும் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், மாணவர்கள் சென்ற சுற்றுலா பஸ் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் காலை சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஜோஸ்னா பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் மேலும் சில மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஜோஸ்னாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஓய்வுபெற்ற போலீஸ்காரர் ஜார்ஜ் மற்றும் ஸ்வப்னா தம்பதியின் மகள் ஜோஸ்னா ஆவார்.

மகள் விபத்தில் உயிரிழந்த தகவல் அறிந்ததும் ஜோஸ்னாவின் தந்தை மற்றும் உறவினர்கள் உடனடியாக பஞ்சாப்புக்கு புறப்பட்டுச் சென்றனர்.

படிப்பு சுற்றுலாவுக்கு சென்ற கல்லூரி மாணவி பஸ் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கடத்துருத்தி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA