“பதோஹி” மாவட்டத்தின் பெயர் மாற்றம்..!
உத்தரப் பிரதேசம், 05 அக்டோபர் (ஹி.ச.) உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரபலமான கம்பளத் தொழில் நகரமாக விளங்கும் பதோஹி மாவட்டத்தின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இனி இந்த மாவட்டம் சந்த் ரவிதாஸ் நகர் பதோஹி என்ற பெயரில் அழைக்கப்படும் என அம்மாநில மு
Name board


உத்தரப் பிரதேசம், 05 அக்டோபர் (ஹி.ச.)

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரபலமான கம்பளத் தொழில் நகரமாக விளங்கும் பதோஹி மாவட்டத்தின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

இனி இந்த மாவட்டம் சந்த் ரவிதாஸ் நகர் பதோஹி என்ற பெயரில் அழைக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் அக்டோபர் 4, 2026 அன்று பதோஹி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

மாவட்டத்திற்கு சென்ற அவர், ரூ.1,340 கோடிக்கும் அதிக மதிப்பிலான 112 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், சில திட்டங்களைத் தொடங்கி வைத்தும் பேசினார்.

அப்போது, “இனி நமது பதோஹி மாவட்டம் சந்த் ரவிதாஸ் நகர் பதோஹி என்று அழைக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

சமூக சீர்திருத்தவாதியும் ஆன்மிகத் தலைவருமான சந்த் ரவிதாஸ் பெயரை மாவட்டத்துக்கு சூட்டுவது அவரது சமூக சமத்துவக் கொள்கைகளை நினைவுகூரும் நடவடிக்கை என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சந்த் ரவிதாஸின் 650-வது பிறந்தநாள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் உத்தரப் பிரதேச அரசு முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 29, 2026 அன்று வாராணசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பதோஹி மாவட்டம் மீண்டும் சந்த் ரவிதாஸ் நகராக பெயர் மாற்றப்படும் என யோகி ஆதித்யநாத் முதலில் அறிவித்திருந்தார்.

தற்போது பதோஹியிலேயே நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த அறிவிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.,

பதோஹி முன்பு வாராணசி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக 1994 ஜூன் 30-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தின் 65-வது மாவட்டமாக பதோஹி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வாராணசி மாவட்டத்தில் இருந்து பதோஹி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

பதோஹி மாவட்டத்தின் பெயர் கடந்த மூன்று தசாப்தங்களில் அரசியல் மற்றும் நிர்வாக மாற்றங்களுக்கு ஏற்ப பலமுறை மாற்றப்பட்டுள்ளது.

மாயாவதி தலைமையிலான அரசின் காலத்தில், மாவட்டத்திற்கு ‘சந்த் ரவிதாஸ் நகர்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர், 1999-ம் ஆண்டு பாஜக ஆட்சியில், சந்த் ரவிதாஸ் நகர் பதோஹி என இரு பெயர்களும் இணைக்கப்பட்டன.

அதன்பிறகு, டிசம்பர் 6, 2014 அன்று அப்போதைய அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அரசு, ‘சந்த் ரவிதாஸ் நகர்’ என்ற பெயரை நீக்கி மீண்டும் ‘பதோஹி’ என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தது. இதனால் கடந்த பல ஆண்டுகளாக மாவட்டம் பதோஹி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மீண்டும் மாவட்டத்தின் பெயரை சந்த் ரவிதாஸ் நகர் பதோஹி என மாற்றுவதாக அறிவித்துள்ளது.

பதோஹி இந்தியாவின் முக்கிய கம்பள உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனால் கார்பெட் சிட்டி எனவும் அழைக்கப்படுகிறது. மாவட்டத்தின் வரலாறு, ஆன்மிக முக்கியத்துவம் மற்றும் சந்த் ரவிதாஸின் சமூக சமத்துவக் கருத்துகளை முன்னிறுத்தும் வகையில் இந்த பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதோஹி வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளதால், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், பதோஹி மாவட்டத்தின் பெயர் இன்று முதல் அதிகார பூர்வமாக

சந்த் ரவிதாஸ் நகர் பதோஹி என மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V