Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 அக்டோபர் (ஹி.ச.)
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில், சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் – சென்னை கடற்கரை வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயில் கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது தடம்புரண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தடம்புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும், சம்பவத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் தடம்புரண்டதன் காரணமாக குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில்களின் சேவையில் தாமதம் மற்றும் மாற்றங்கள் ஏற்பட்டன.
இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பாதிக்கப்பட்ட சேவைகளை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / LOGESHWARI V