இயற்கை முறையில் உரம் தயாரிப்பது எப்படி?
தமிழ்நாடு, 05 அக்டோபர் (ஹி.ச.) விவசாயத்தில் நல்ல மகசூல் பெற பயிர்களுக்கு தேவையான உரங்களை வழங்குவது மட்டுமின்றி, மண்ணின் வளத்தையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம். குறிப்பாக ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத
Farmers


தமிழ்நாடு, 05 அக்டோபர் (ஹி.ச.)

விவசாயத்தில் நல்ல மகசூல் பெற பயிர்களுக்கு தேவையான உரங்களை வழங்குவது மட்டுமின்றி, மண்ணின் வளத்தையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம்.

குறிப்பாக ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் தன்மையை மேம்படுத்த முடியும்.

இதை, வீட்டிலும் பண்ணையிலும் வீணாகும் இலைகள், மற்றும் பயிர் கழிவுகளை வைத்தே

இந்த உரத்தை

தயார் செய்ய முடியும்..

இதனால் உரச் செலவு குறைவதுடன், வேளாண் கழிவுகளையும் பயன்படுத்த முடியும்.

இயற்கை உரம் தயாரிக்க என்னென்ன தேவை என்பதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

இயற்கை உரம் தயாரிப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. உலர்ந்த இலைகள், பயிர் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், கால்நடை சாணம், பசுந்தழைகள் போன்ற பொருட்களே போதுமானது.

ரசாயனப் பொருட்கள் கலக்காத இயற்கையான கழிவுகளை தேர்வு செய்வது முக்கியம்.

முதலில் நிழலான இடத்தை தேர்வு செய்து அங்கு குழி அல்லது தொட்டி அமைக்க வேண்டும். அதன் அடிப்பகுதியில் உலர்ந்த இலைகள் மற்றும் பயிர் கழிவுகளை ஒரு அடுக்காகப் போடலாம்.

அதன் மேல் கால்நடை சாணம் அல்லது பண்ணைக் கழிவுகளை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு கழிவுப் பொருட்களையும் சாணத்தையும் மாறி மாறி அடுக்குகளாக சேர்க்கலாம். குவியல் மிகவும் வறண்டு போகாமல் இருக்க அவ்வப்போது சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

அதேநேரத்தில் அதிகப்படியான தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.

குவியலை அவ்வப்போது கிளறிவிடுவதன் மூலம் காற்றோட்டம் கிடைத்து, கழிவுகள் சீராக மட்குவதற்கு உதவும்.

கழிவுகள் நன்றாக மட்கிய பிறகு அவை அடர் நிறத்தில், மண்ணைப் போன்ற தன்மையுடனும் இயற்கையான மணத்துடனும் காணப்படும். இந்த நிலையில் கிடைக்கும் மக்கிய உரத்தை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

இயற்கை உரத்தை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள கரிமப் பொருட்களை அதிகரிக்கவும், மண்ணின் நீரை தக்கவைத்துக்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

மேலும், பண்ணையில் கிடைக்கும் கழிவுகளை பயனுள்ள உரமாக மாற்றுவதால் கழிவு மேலாண்மைக்கும் இது உதவியாக இருக்கும்.

எனினும், எந்த பயிருக்கு எவ்வளவு அளவு உரம் தேவை என்பது மண் மற்றும் பயிரின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

எனவே, மண் பரிசோதனை செய்து, வேளாண்மைத் துறை அதிகாரிகள் அல்லது வேளாண் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று உரத்தை பயன்படுத்துவது சிறந்தது.

Hindusthan Samachar / LOGESHWARI V