Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 05 அக்டோபர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கும், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த இளைஞர் காதலிப்பதாக கூறி மாணவியை கடந்த மாதம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த வாலிபர், மாணவியை தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து, அதனை வெளியிடுவதாக மிரட்டியும் வந்துள்ளார்.
இதனால் மிகுந்த வேதனைக்கு ஆளான மாணவி.,
இதுகுறித்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையைத் தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 4 இளைஞர்களை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்கள் வாயிலாக அறிமுகமாகும் நபர்களை நம்பி சிறார்கள் தனியாகச் செல்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட அடையாளம் மற்றும் அவரை அடையாளம் காணக்கூடிய எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V