Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 05 அக்டோபர் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த லாரி ஒன்றை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், லாரியில் இருந்த 5 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் ஜோயல் (24), அரவிந்த் (31), காமராஜ் (29), ஒண்டிமுத்துகுமார் (46), இதயபாலன் (33) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் இருந்து கஞ்சாவை தமிழ்நாட்டிற்கு கடத்தி வந்து, பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா, கஞ்சா எங்கிருந்து எடுத்துவரப்பட்டது,
தமிழ்நாட்டில் யாரிடம் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் லாரி தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலை நடந்த இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Hindusthan Samachar / LOGESHWARI V