தாராபுரம் இடைத்தேர்தல் - பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68 சதவீத வாக்குப்பதிவு
திருப்பூர், 06 அக்டோபர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களி
By-election


திருப்பூர், 06 அக்டோபர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிலிக்ஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

காலை முதல் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வருகை அதிகமாகவும், சில மையங்களில் சற்று குறைவாகவும் காணப்பட்டது.

வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், தேர்தல் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாலை வாக்குப்பதிவு நிறைவடையும் நேரம் நெருங்கி வருவதால், வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக பதிவாகும் வாக்கு சதவீதம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் வெளியிடப்படும்.

Hindusthan Samachar / ANANDHAN