மதுராந்தகம் இடைத்தேர்தல் - காலை 11 மணி நிலவரப்படி 35.55% வாக்குப்பதிவு
மதுராந்தகம், 06 அக்டோபர் (ஹி.ச.) மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, தொகுதியில் 35.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்
Vote


மதுராந்தகம், 06 அக்டோபர் (ஹி.ச.)

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி, தொகுதியில் 35.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் அடங்குவர். வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிகளுக்கு தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர்.

மதுராந்தகம் தொகுதியில் கடந்த 2026 பொதுத்தேர்தலின்போது காலை 11 மணி நிலவரப்படி 37.17 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் 2026 இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 35.55 சதவீத வாக்குப்பதிவு மட்டுமே பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது இடைத்தேர்தலில் 1.62 சதவீதம் குறைவாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதால், பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V