செவிலியர்கள் மீதான அடக்குமுறையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் - தமிழச்சி தங்கபாண்டியன்
சென்னை, 06 அக்டோபர் (ஹி.ச.) சென்னை எழும்பூரில் ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடத்திய தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு, கைது செய்திரு
Tamizhachi Thangapandian


சென்னை, 06 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை எழும்பூரில் ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடத்திய தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு, கைது செய்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தவெக அரசுக்கும் காவல்துறைக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில்,

பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையை கையாண்டிருக்கும் இந்த அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்தபோது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து, இன்று அவர்களின் குரலை ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது.

உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டத்தை ஒடுக்காமல், அவர்களை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். செவிலியர்கள் மீதான அடக்குமுறையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN