வடமாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
புதுடெல்லி, 06 அக்டோபர் (ஹி.ச.) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. குறிப்பாக வடஇந்திய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று
Rain


புதுடெல்லி, 06 அக்டோபர் (ஹி.ச.)

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடஇந்திய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.

டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் அக்டோபர் 6 முதல் 9-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் இன்று முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளிலும் இன்று முதல் வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே தென் இந்தியாவிலும் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் சில பகுதிகளிலும் மழை தொடரும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கான உள்ளூர் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடஇந்தியாவில் பருவமழை படிப்படியாக விலகி வரும் நிலையில், சில பகுதிகளில் உருவாகியுள்ள வானிலை அமைப்புகளால் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V