காணாமல் போன தாய், 4 வயது குழந்தை சடலமாக மீட்பு
லலித்பூர், 06 அக்டோபர் (ஹி.ச.) உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டம் ஜாகலௌன் பகுதியில் உள்ள ஹர்திலா குடியிருப்பைச் சேர்ந்தவர் பூஜா (26). இவருக்கு நான்கு வயதில் மகன் இருந்துள்ளார். இவர்களது குடும்பத்தினர் சிலர் நேற்று காலை விவசாய வேலைகளுக்க
Death


லலித்பூர், 06 அக்டோபர் (ஹி.ச.)

உத்தரப் பிரதேச மாநிலம்

லலித்பூர் மாவட்டம் ஜாகலௌன் பகுதியில் உள்ள ஹர்திலா குடியிருப்பைச் சேர்ந்தவர் பூஜா (26). இவருக்கு நான்கு வயதில் மகன் இருந்துள்ளார்.

இவர்களது குடும்பத்தினர் சிலர் நேற்று காலை விவசாய வேலைகளுக்காக வெளியே சென்றிருந்த நிலையில்., மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது., அவர்கள் இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டபோது, வீட்டுக்கு அருகே அமைந்திருந்த கிணற்றின் அருகில் அவர்களது உடைகள் மற்றும் காலணிகள் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிணற்றுக்குள் தேடியபோது பூஜா மற்றும் அவரது மகன் இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் .

இதுகுறித்து தகவலரிந்து வந்த போலீசார்., அப்பகுதி மக்களின் உதவியுடன் கயிறு மற்றும் கட்டிலின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி இருவரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் பூஜா 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்ததாக உள்ளூர் செய்தி தெரிவிக்கிறது. மேலும், சம்பவத்துக்கு முன்பு குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆரம்பகட்ட விசாரணையில் குடும்பத் தகராறு உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பவத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து ஜாகலௌன் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ராம்பிரகாஷ் கூறுகையில், தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தாய் மற்றும் மகனின் உடல்களை மீட்டதாக தெரிவித்தார்.

சம்பவம் கொலையா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, பூஜாவின் குடும்பத்தினரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். போலீசார் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V