மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் நிறைவு - பிரதமர் மோடிக்கு ஒய்.எஸ்.ஆர் ஜெகன் வாழ்த்து
அமராவதி , 07 அக்டோபர் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வ
A


அமராவதி , 07 அக்டோபர் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

குஜராத் முதல்-மந்திரியாகவும், அதன்பிறகு இந்திய பிரதமராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றி வருவது வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

பின்னர் 2014-ம் ஆண்டு இந்திய பிரதமராக பொறுப்பேற்றார். இவ்வாறு கூறினார்.

பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA