Enter your Email Address to subscribe to our newsletters

வாணியம்பாடி, 07 அக்டோபர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் கிராமத்தில் இருந்து வள்ளிப்பட்டு செல்லும் சாலையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.
இங்கு மதுபான கடை இயங்கி வருவதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும்,
இங்குள்ள இளைஞர்கள் முதல் அனைவரும் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள்இந்த மதுபான கடை அமைந்துள்ள சாலை வழியாக செல்வதால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுவதாகவும்,
விவசாய நிலங்கள் மிகுந்து காணப்படக்கூடிய பகுதியில் வந்து இந்த அரசு மதுபான கடை எங்கே வருவதால் மது பிரியர்கள் வந்து விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்தி பாட்டில்களை உடைத்து வீசி செல்வதால் விவசாய முற்றிலுமாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
இந்த கடையை இடமாற்றம் செய்ய கோரி கிராமமக்கள் கடந்த 14 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தும், அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும் அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்
கடந்த 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யும் வரை எந்த கூட்டத்திலும் பங்கேற்க மாட்டோம் என்று ஊராட்சி மன்ற தலைவர் உட்பட கிராமமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு மதுபான கடை முன்பு அமர்ந்து மதுபான கடையை திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த அரசு நகர பேருந்து வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமிய காவல் ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் இந்த மது கடையை விட மாற்றம் செய்யும் வரை இங்கிருந்து களைய மாட்டோம் என்று பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி ஆலங்காயம் உள்ளிட அனைத்து காவல் நிலையங்களில் இருந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V