Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 அக்டோபர் (ஹி.ச.)
கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற உதயாஸ்தமன பூஜையை, வழக்கம்போல் விருச்சிக மாத ஏகாதசி நாளிலேயே நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருவாயூர் கோவிலில் ஆண்டுதோறும் விருச்சிக மாத ஏகாதசி நாளில் உதயாஸ்தமன பூஜை நடைபெற்று வருகிறது.
ஆனால், அந்த நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பூஜையை துலாம் மாதத்திற்கு மாற்ற தேவசம் வாரியம் முடிவு செய்தது.
இதற்கு கோவில் தந்திரியின் அனுமதியும் பெறப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், முந்தைய ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தது. இதையடுத்து, இந்த ஆண்டும் விருச்சிக மாத ஏகாதசி நாளிலேயே உதயாஸ்தமன பூஜையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனால், உதயாஸ்தமன பூஜையை துலாம் மாதத்திற்கு மாற்ற தேவசம் வாரியம் எடுத்த முடிவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் இதே விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, விருச்சிக மாத ஏகாதசி நாளிலேயே பூஜையை நடத்த உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA