தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை, 08 அக்டோபர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்ன
Rain


சென்னை, 08 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று தென்காசி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மழை பெய்யக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V