சேவூர் ராமச்சந்திரன் வழக்கு- முடக்கப்பட்ட நகைகளைத் தற்காலிகமாக ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 09 அக்டோபர் (ஹி.ச.) அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முடக்கப்பட்ட அவரது மருமகள் சொர்ணாம்பிகாவின் நகைகளை, நிபந்தனைகளுடன் தற்காலிகமாக ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர
Madras high court


சென்னை, 09 அக்டோபர் (ஹி.ச.)

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முடக்கப்பட்ட அவரது மருமகள் சொர்ணாம்பிகாவின் நகைகளை, நிபந்தனைகளுடன் தற்காலிகமாக ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக முடக்கப்பட்ட நகைகளைத் தன்னிடம் தற்காலிகமாக ஒப்படைக்கக் கோரி அவரது மருமகள் சொர்ணாம்பிகா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சொர்ணாம்பிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், முடக்கப்பட்ட நகைகளைச் சில நிபந்தனைகளுடன் தற்காலிகமாக ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, ஒப்படைக்கப்படும் நகைகளை அடமானம் வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

மேலும், காவல்துறையின் விசாரணைக்காக நகைகள் தேவைப்படும் பட்சத்தில், அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சேவூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், முடக்கப்பட்ட நகைகளைத் தற்காலிகமாகப் பெறுவதற்காக அவரது மருமகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V