தட்டாஞ்சாவடியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி...!
புதுச்சேரி, 09 அக்டோபர் (ஹி.ச.) 2026 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் மங்கலம் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு தட்டாஞ்சாவடி தொகுதியின் உ
Puducherry


புதுச்சேரி, 09 அக்டோபர் (ஹி.ச.)

2026 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவர் மங்கலம் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு தட்டாஞ்சாவடி தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் இருந்த நிலையில், 21,756 பேர் வாக்களித்தனர். இதன் மூலம் 80.81 சதவீத வாக்குகள் பதிவாகின. அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

நான்கு சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 13,358 வாக்குகளைப் பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இ. விநாயகம் 4,876 வாக்குகளைப் பெற்றார். இதனால் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர் கே. சேது செல்வம் 2,664 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.எம். சலீம் 310 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் எஸ். கார்த்திகுமாரி 171 வாக்குகளையும் பெற்றனர்.

தட்டாஞ்சாவடி தொகுதி நீண்டகாலமாக என். ரங்கசாமியின் அரசியல் செல்வாக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இந்தத் தொகுதியில் அவரது கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது, புதுச்சேரி அரசியல் சூழலில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தல் முடிவில் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றதன் மூலம் தட்டாஞ்சாவடி தொகுதி மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் வசமாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து வெற்றி உறுதி செய்யப்பட்டது.

Hindusthan Samachar / LOGESHWARI V