Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 நவம்பர் (ஹி.ச.)
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு, தமிழ்நாடு ஹாக்கி அணியில் வெளிமாநில வீரர்கள் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஹாக்கி வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள 18 வீரர்களில் 5 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறும் போராட்டக்காரர்கள், இதனால் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்களுக்கு உரிய வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்காமல் போவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், தமிழகத்தில் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடும் வீரர்களைக் கண்டறிந்து மாநில அணியில் இடம்பெறச் செய்யும் நடைமுறை முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பணியாற்றுவதற்காக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தமிழ்நாடு ஹாக்கி அணியில் சேர்ப்பதை ஏற்க முடியாது என்றும், தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam