லஞ்சப் புகார் அளிக்காதது ஏன்? லயோலா மணி, அமைச்சர் ராஜ்மோகனுக்கு எதிராக திமுக ஐடி விங் கேள்வி!
சென்னை, 01 நவம்பர் (ஹி.ச.) த.வெ.க. கட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜ்மோகனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், லயோலா மணியின் செயல்பாடு குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. இதுகுறித்து திமுக ஐ
திமுக ஐடி விங்


சென்னை, 01 நவம்பர் (ஹி.ச.)

த.வெ.க. கட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜ்மோகனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், லயோலா மணியின் செயல்பாடு குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

த.வெ.க. நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜ்மோகனுக்கு யாரோ ஒருவர் லயோலா மணி மூலமாக லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. லஞ்சப் பேரத்தை அமைச்சரிடம் கொண்டு சென்ற லயோலா மணி, இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டாரா? உண்மையான குற்றவாளிக்காக அமைச்சரிடம் லஞ்சப் பேரம் பேசியது அவர்தானே? எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், லஞ்சம் கொடுப்பதும், கொடுக்க முயற்சிப்பதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி குற்றமாகும் எனக் குறிப்பிட்டுள்ள திமுக ஐடி விங், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகனோ அல்லது லயோலா மணியோ ஏன் இதுவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் புகார் அளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் நபரை இருவரும் பாதுகாப்பது ஏன்? கட்சியின் நிதிக்காகப் பணம் பெற்றார்களா? எனவும் விமர்சித்துள்ளது.

லஞ்சப் பேரம் குறித்து அவரே ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், ஊழல் தடுப்புத் துறை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தாதது ஏன்? யாருக்குப் பயந்து அமைதியாக இருக்கிறது? என்றும் திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam