வயநாடு எஸ்.எப்.ஐ.யில் உட்கட்சி மோதல் -மாவட்ட தலைமை மீது இணைச் செயலாளர் புகார்
கல்பட்டா, 01 நவம்பர் (ஹி.ச.) கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பான (எஸ்.எப்.ஐ.) அமைப்புக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட தலைமையின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து, மாவட்ட இணைச் செயலாளர் சாயந்த் பேஸ்புக்கில் ப
A


கல்பட்டா, 01 நவம்பர் (ஹி.ச.)

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பான (எஸ்.எப்.ஐ.) அமைப்புக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட தலைமையின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து, மாவட்ட இணைச் செயலாளர் சாயந்த் பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். நீதிக்காக சில விஷயங்களை வெளிப்படையாகக் கூறுகிறேன்’ என்ற தலைப்பில் அவர் தனது பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

புல்பள்ளி பழசிராஜா கல்லூரியில் வெகுஜன தகவல் தொடர்பு துறையில் படித்து வரும் சாயந்த், கடந்த அக்டோபர் 12-ந்தேதி புல்பள்ளி எஸ்.எப்.ஐ. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம். ஆதர்ஷ், மத்திய குழு உறுப்பினர் சாந்த்ரா ரவீந்திரன் உள்ளிட்டோர் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரசாரம் நடத்துவதில் கருத்து வேறுபாடு

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரியில் பிரசாரம் மேற்கொள்ள எஸ்.எப்.ஐ. நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், எஸ்.எப்.ஐ. தனியாக பிரசாரம் மேற்கொள்ளாமல் மற்ற மாணவர் அமைப்புகளுடன் இணைந்து பிரசாரம் நடத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாவட்ட தலைமையுடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வயநாடு மாவட்ட எஸ்.எப்.ஐ. அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA