பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைப் பேணும் தவெக அரசு - தவெக ஐ.டி. விங் பெருமிதம்
சென்னை, 01 நவம்பர் (ஹி.ச.) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் விரைவான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாண்
CM Joseph Vijay


சென்னை, 01 நவம்பர் (ஹி.ச.)

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் விரைவான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, முக்கிய நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளதாக தவெக ஐ.டி. விங் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

அதில்,

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO Act) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ரூ.46.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் (NDPS Act) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.

ஏற்கெனவே செயல்பட்டு வரும் 11 சிறப்பு நீதிமன்றங்களுடன், புதிதாக 4 சிறப்பு நீதிமன்றங்கள் என மொத்தம் 15 NDPS சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 47 காவல் மாவட்டங்களில் POCSO வழக்குகளை விரைந்து விசாரிக்க மொத்தம் 52 சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தருவதில் துரிதமான நீதி நடைமுறை என மக்கள் நலனை முன்னிறுத்தி நடைபோடுகிறது தவெக அரசு.

மக்களுக்கான நல்லாட்சியில் தவெக அரசு வெற்றி நடைபோடுகிறது என்று பதிவிட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN