சசூரி கல்விக் குழுமத்தின் வெள்ளி விழா- அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு!
திருப்பூர், 01 நவம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள சசூரி கல்விக் குழுமத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா, முப்பெரும் விழாவாகக் கோலாகலமாக நடைபெற்றது. சசூரி கல்விக் குழுமத்தின் தலைவர் ஏ.எம். கந்தசாமி,தலைமையில் நடைபெற்ற விழாவில் ச
A


திருப்பூர், 01 நவம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள சசூரி கல்விக் குழுமத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா, முப்பெரும் விழாவாகக் கோலாகலமாக நடைபெற்றது.

சசூரி கல்விக் குழுமத்தின் தலைவர் ஏ.எம். கந்தசாமி,தலைமையில் நடைபெற்ற விழாவில் செயலாளர் சவிதா மோகன்ராஜ், செயல் இயக்குநர் டாக்டர் பி. நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, வெள்ளி விழா நினைவுச் சின்னம் மற்றும் எட்டு புதிய நவீன கல்வி, தொழில் மேம்பாட்டு மையங்களைத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக , கொங்கு மண்டலத்தில் மருத்துவம், விவசாயம்,கல்வி,தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் இது போன்று சாரனையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அமைவதாக தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சசூரி கல்வி குழுமங்களின் செயலாளர் சவீதா மோகன் ராஜ்,

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதையும், அவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் சார்ந்த திறன்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, எட்டு புதிய நவீன கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டு மையங்களை சசூரி கல்லூரியில் துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.

விழாவில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்திய பாமா,முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உட்பட, தொழில்துறையினர், கல்வியாளர்கள், சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தின் நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கல்விச் சேவையில் 25 ஆண்டுகளைக் கடந்துள்ள சசூரி கல்விக் குழுமத்தின் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வாக வெள்ளி விழா அமைந்தது குறிப்பிடதக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA