தமிழ்நாடு நாள் -தமிழக மக்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!
சென்னை, 01 நவம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொன்மையும், தனித்துவம
அண்ணாமலை


சென்னை, 01 நவம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தொன்மையும், தனித்துவமும், வரலாற்றுப் பெருமையும் கொண்ட தாய்த்தமிழ் மொழியை அடையாளமாகக் கொண்டு நமது மாநிலம் உருவான இந்த நன்னாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழி, இலக்கியம், கலை, கட்டிடக்கலை, வீரம், விருந்தோம்பல் என ஒவ்வொன்றிலும் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும், கல்வி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உயர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பாரம்பரியத்தைப் பாதுகாத்து, வளர்ச்சியிலும் முன்னேறி வளமான தமிழகத்தை உருவாக்க இந்த தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம் என்றும் அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P