Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 01 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். காய்கறி கடை நடத்தி வந்த இவர், டிரைவராகவும் வேலை செய்து வந்துள்ளார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒட்டப்பிடாரம்முன்னாள் ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி கடையில் இறக்கிவிட்டு, பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் பங்க் வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால், பாலமுருகனை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர், பாலமுருகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், வீட்டு விஷேசத்துக்காக பேனர் கட்டிக் கொண்டிருந்த போது பாலமுருகனுக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த சிலருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கில் திமுக பிரமுகர்
1. பொன்பாண்டி என்ற ரவி
2. சிவசந்திரன்
3. சிவக்குமார்
4. மணிகண்டன் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN