காசி தமிழ் சங்கமம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2026 நவம்பர் 13!
புதுடெல்லி, 10 நவம்பர் (ஹி.ச.) இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையே மொழி வேறுபாடுகள் இருந்தாலும், பண்பாடு, பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் அறிவுசார் சிந்தனைகளில் ஆழமான ஒற்றுமை இருப்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வாக காசி தமிழ் சங்கமம் வி
க


புதுடெல்லி, 10 நவம்பர் (ஹி.ச.)

இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையே மொழி வேறுபாடுகள் இருந்தாலும், பண்பாடு, பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் அறிவுசார் சிந்தனைகளில் ஆழமான ஒற்றுமை இருப்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வாக காசி தமிழ் சங்கமம் விளங்குகிறது.

குறிப்பாக, தமிழின் தொன்மையையும் திருக்குறளின் உலகளாவிய சிந்தனைகளையும் இந்தியாவின் பிற மொழி பேசும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த ஆண்டு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமம் 5.0, தமிழகத்தின் இலக்கியப் பெருமையையும் காசியின் வரலாற்றுச் சிறப்பையும் ஒரே மேடையில் இணைக்கும் பண்பாட்டுத் திருவிழாவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறையினர்.

தொழில் வல்லுநர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள்.

பெண்கள்.

ஆன்மிகத் தலைவர்கள்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2026 நவம்பர் 13 என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கவும் கூடுதல் விவரங்களைப் பெறவும் அதிகாரப்பூர்வ

அதிகாரப்பூர்வ இணையதளம்

காசி தமிழ் சங்கமம்

Hindusthan Samachar / Durai.J