சபரிமலை மண்டல காலத்திற்கு 7.5 லட்சம் அரவணை டின்கள் தயார் -அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
திருவனந்தபுரம், 10 நவம்பர் (ஹி.ச.) சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு யாத்திரைக் காலம் தொடங்க உள்ள நிலையில், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் தெரிவ
Kerala


திருவனந்தபுரம், 10 நவம்பர் (ஹி.ச.)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு யாத்திரைக் காலம் தொடங்க உள்ள நிலையில், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக ஏற்கனவே 7.5 லட்சம் அரவணை டின்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்தாலும் தேவைக்கேற்ப அரவணை பாயசம் தயாரிக்கும் அளவுக்கு உற்பத்தி நிலையம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அரவணை தயாரிப்பு ஆலை தொடர்பான பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு இயந்திரம் மீண்டும் செயல்படத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், சலக்காயம் முதல் பம்பை வரையிலான சாலைப் பணிகளை மாநில பொதுப்பணித்துறை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மண்டல காலம் நவம்பர் 17ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாகத் தயார்படுத்துமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், நவம்பர் 16ஆம் தேதி தாம் சபரிமலைக்குச் செல்ல உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே, வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், 1947ஆம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு பத்திகள் மட்டுமே அரசு நிகழ்ச்சிகளில் பின்பற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி அரசு சார்ந்த நிகழ்வாக இருந்ததால், அதற்குரிய நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

ஆனால், சம்பந்தப்பட்ட ஊராட்சியினர் அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியிலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் அமைச்சர் கே. முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V