சுவாமிமலையில் கந்த சஷ்டி பெருவிழா கோலாகலத் தொடக்கம்- தங்கக் கவசம், வைரவேலுடன் அருள்பாலித்த சுவாமிநாதர்
கும்பகோணம், 10 நவம்பர் (ஹி.ச.) தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்த திருத்தலமாக சுவாமிமலை விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சந்திரசேகரர், அபிராமி அம்பாள், வள்ளி, தெய்வானை சமேத ச
Temple


கும்பகோணம், 10 நவம்பர் (ஹி.ச.)

தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்த திருத்தலமாக சுவாமிமலை விளங்குகிறது.

இத்தகைய சிறப்புமிக்க திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சந்திரசேகரர், அபிராமி அம்பாள், வள்ளி, தெய்வானை சமேத சண்முகர், வீரகேசரி மற்றும் வீரபாகு ஆகியோருக்குச் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நாதஸ்வரம் மற்றும் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, மலைக்கோவிலில் இருந்து சுவாமிகள் படியிறங்கி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

அப்போது சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கந்த சஷ்டி பெருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் சுவாமி திருவீதியுலா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் திருக்கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னர் தங்கக் கவசம் மற்றும் வைரவேலுடன் மலர் அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

இதையடுத்து, நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமிநாதரைத் தரிசனம் செய்தனர். மேலும், அர்ச்சனை செய்தும் தீபங்கள் ஏற்றியும் முருகப்பெருமானை வழிபட்டனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V