மின்கட்டணப் பிரச்சினையால் மன உளைச்சல் – மின்வாரியத்தை விமர்சித்த அதிமுக!
சென்னை, 11 நவம்பர் (ஹி.ச.) மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை பகுதியில், மின்கட்டணம் தொடர்பாக 89 வயது மூத்த வழக்கறிஞர் ஒருவர் செய்தித்தாளில் பொது அறிவிப்பு வெளியிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித
Aiadmk


சென்னை, 11 நவம்பர் (ஹி.ச.)

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை பகுதியில், மின்கட்டணம் தொடர்பாக 89 வயது மூத்த வழக்கறிஞர் ஒருவர் செய்தித்தாளில் பொது அறிவிப்பு வெளியிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஐடிவிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

மின்சாரக் கட்டணம் வழக்கத்தைவிடப் பல மடங்கு அதிகமாக வந்ததாகவும், மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தனது சொந்தச் செலவில் செய்தித்தாளில் பகிரங்க பொது அறிவிப்பு வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சாடினர்.

இதுவரை அவர் தனது வீட்டிற்கு ரூ.1,300 வரை வந்த மின்சாரக் கட்டணம் தற்போது திடீரென ரூ.11 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் உள்ள அனைத்து மின் சுவிட்சுகளையும் அணைத்த பிறகும் மின்மீட்டரில் கணக்கீடு தொடர்ந்து ஓடுவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மின்மீட்டர் செயல்பாடு மற்றும் மின்கட்டணக் கணக்கீட்டில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு உள்ளதா என்பது குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.

மூத்த வழக்கறிஞரே மின்கட்டணப் பிரச்சினையால் இத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்றால், தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாத சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், தனிநபரின் புகாராக மட்டும் இதைப் பார்க்காமல், பொதுமக்கள் எதிர்கொள்ளும் மின்கட்டணப் பிரச்சினையாக அரசு கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

காரணம் என்ன, மின்மீட்டரில் கோளாறு உள்ளதா, புகார் மீது மின்வாரிய அதிகாரிகள் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அமைச்சரும், மின்வாரிய நிர்வாகமும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V