சென்னையில் 5 நாட்களில் 664.12 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் – மாநகராட்சி தகவல்
சென்னை, 11 நவம்பர் (ஹி.ச.) சென்னையில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் மொத்தம் 664.12 மெட்ரிக் டன் பட
Dowa


சென்னை, 11 நவம்பர் (ஹி.ச.)

சென்னையில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் மொத்தம் 664.12 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 7-ம் தேதி 3.95 மெட்ரிக் டன், நவம்பர் 8-ம் தேதி 148.91 மெட்ரிக் டன், நவம்பர் 9-ம் தேதி 239.63 மெட்ரிக் டன், நேற்று 180.32 மெட்ரிக் டன் மற்றும் இன்று 91.31 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் கடந்த 5 நாட்களில் சென்னையில் மொத்தம் 664.12 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ