Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 நவம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 209 நூலகங்களில் இருந்து சர்ச்சைக்குள்ளான பதிப்பகங்களின் 3,671 புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக
(2024-25, 2025-26) கொள்முதல் செய்யப்பட்ட பீனிக்ஸ் மற்றும் அகல்விளக்கு ஆகிய பதிப்பகங்களின் புத்தகங்கள் அண்மையில் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, அவற்றை நூலகங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள 209 நூலகங்களில் இருந்து மொத்தம் 3,671 புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் மொத்தம் 33,93,740 புத்தகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ