‘சண்டியர்’ திரைப்படத் தலைப்பு விவகாரம் குறித்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் -தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்குமரன்
சென்னை, 11 நவம்பர் (ஹி.ச.) ‘சண்டியர்’ திரைப்படத் தலைப்பு தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி அளித்துள்ள மனு குறித்து, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முழுமையாக ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன
Gkm


சென்னை, 11 நவம்பர் (ஹி.ச.)

‘சண்டியர்’ திரைப்படத் தலைப்பு தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி அளித்துள்ள மனு குறித்து, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முழுமையாக ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

‘சண்டியர்’ திரைப்படத் தலைப்பு தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுவில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், திரைப்படத் தலைப்புகளின் செல்லுபடியாகும் காலம் 10 ஆண்டுகள் என்றும், குறிப்பிட்ட காலத்திற்குள் தலைப்பைப் புதுப்பிக்காவிட்டால் அதனை வேறு நபர்களுக்கு வழங்கலாம் என்றும் தெரிவித்தார். அந்த அடிப்படையில்தான் ‘சண்டியர்’ திரைப்படத் தலைப்பு வழங்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.

இந்நிலையில், டாக்டர் கிருஷ்ணசாமி அளித்துள்ள மனு குறித்து சங்கத்தில் முதலில் ஆலோசனை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டறிந்து உரிய முடிவு எடுக்கப்படும் என தமிழ்குமரன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ