மதுரை அருகே பயங்கரவாத எதிர்ப்புப் படை தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை – 2 வயது பெண் குழந்தை உள்ள நிலையில் சோகம்
மதுரை, 11 நவம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பயங்கரவாதிகள் எதிர்ப்புப் படை தனிப்பிரிவில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் அ
Maj


மதுரை, 11 நவம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பயங்கரவாதிகள் எதிர்ப்புப் படை தனிப்பிரிவில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள தினமணி நகர் பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ், மதுரை பயங்கரவாதிகள் எதிர்ப்புப் படையின் (Anti-Terrorism Squad) தனிப்பிரிவில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு தனது வீட்டின் ஹாலில் தூக்கிட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்துத் தகவலறிந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பணியில் சிறப்பாகச் செயல்பட்டு துறை ரீதியாகப் பல்வேறு பாராட்டுகளைப் பெற்றவர் மோகன்தாஸ் எனக் கூறப்படுகிறது.

குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டாலும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோகன்தாஸுக்கு அருணாதேவி என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இளம் வயதிலேயே தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ