Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் தம்பிராஜ் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது இல்லத்திற்குச் சென்ற கனிமொழி, குடும்பத்தினரைச் சந்தித்து தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி,
இரவு 8 மணியளவில் தம்பிராஜ் கடலில் தவறி விழுந்தபோதே மீன்வளத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அவரை மீட்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் தெரிவித்ததாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், மறுநாள் சக மீனவர்களே கடலில் தேடுதல் நடத்தி தம்பிராஜின் உடலை மீட்டதாகவும் தெரிவித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலில் தத்தளித்த மீனவரை மீட்க உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர்கள் கடலில் காணாமல் போவதும், பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த மீனவர் தம்பிராஜின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படும்போது கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை விரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V