Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 11 நவம்பர் (ஹி.ச.)
லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்புகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ள அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
'முன்னா பாய் MBBS' திரைப்படத்தைச் சுட்டிக்காட்டி அவர் பேசினார்.
இளைஞர்களின் திறமைகளுக்கு மாநிலத்திலேயே உரிய வாய்ப்புகள் கிடைக்காததால் அவர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
உத்தரப் பிரதேச இளைஞர்கள் தங்களது உழைப்பின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உலக நாடுகளிலும் பங்களிப்பு செய்தபோதிலும், சொந்த மாநிலத்தில் அவர்களுக்கான நேர்மையான வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று யோகி குற்றம்சாட்டினார்.
கடந்த காலங்களில் வேலைவாய்ப்பு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வு நடைமுறைகளில் குறிப்பிட்ட சில குழுக்களின் ஆதிக்கம் இருந்ததாகவும், இதனால் தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பாகுபாடுகளும் முறைகேடுகளும் நிலவியதாகக் கூறினார்.
2017-ஆம் ஆண்டுக்கு முன்பு நிர்வாகத்திலும் அரசுப் பணியாளர் தேர்வு முறைகளிலும் 'முன்னா பாய்' பாணியிலான செயல்பாடுகள் இருந்ததாக யோகி ஆதித்யநாத் விமர்சித்தார்.
அதாவது, ஒருவர் தேர்வு எழுதினால் மற்றொருவர் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்படும் வகையில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டினார். இத்தகைய தவறுகளைத் தடுக்க வேண்டிய நிர்வாக அமைப்பே அவற்றுக்குத் துணையாகச் செயல்பட்டதாகவும் அவர் சாடினார்.
தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றங்களை அணுகி தடை உத்தரவுகள் பெறப்படும் சூழல் இருந்ததாகவும், இதற்கிடையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைத்ததாகவும் யோகி குற்றம்சாட்டினார்.
இதுபோன்ற செயல்களால் உத்தரப் பிரதேச இளைஞர்கள் பல்வேறு வழிகளில் ஏமாற்றப்பட்டதாகவும், மாநிலத்தின் வளர்ச்சியும் நிர்வாகச் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V