Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 12 நவம்பர் (ஹி.ச.)
ஹைதராபாத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘கிரீன் எஸ்.எம்.’ என்ற மின்சார கார் சேவை நிறுவனம் மீது பி.ஆர்.எஸ். கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.எஸ். பிரவீன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தெலுங்கானா பவனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 2016-ம் ஆண்டு ஜியோ நிறுவனம் இலவச டேட்டா, இலவச அழைப்பு போன்ற சலுகைகளுடன் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்தது.
இதனால் ஏர்செல், டாடா டொகோமோ, ரிலையன்ஸ் டெலிகாம் போன்ற நிறுவனங்கள் சந்தையில் இருந்து வெளியேறின. வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்தன.
போட்டி நிறுவனங்கள் இல்லாத நிலை ஏற்பட்ட பிறகு ஜியோ தனது கட்டணங்களை உயர்த்தத் தொடங்கியது.
அதேபோன்ற உத்தியைத்தான் தற்போது கிரீன் எஸ்.எம். நிறுவனமும் கையாள முயற்சிக்கிறது. ஒரு கிலோமீட்டருக்கு ரூ.8 என்ற குறைந்த கட்டணத்தில் கார் சேவையை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
இதன் மூலம் ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் தங்களது சொந்த வாகனங்களை நிறுத்திவிட்டு, கிரீன் எஸ்.எம். நிறுவனத்தில் மாத சம்பளத்துக்கு டிரைவர்களாக சேர வேண்டும் என்ற நிலையை உருவாக்க முயற்சிக்கிறது.
இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளால் தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 6 லட்சம் ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. உள்ளூர் டிரைவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதை தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA