Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 நவம்பர் (ஹி.ச.)
டெல்லி திலக் நகர் சட்டமன்றத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஜர்னைல் சிங்கை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தொலைபேசி அழைப்பு மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக இந்த மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த நபர் தன்னை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 6, 2026 அன்று மாலை சுமார் 6 மணியளவில், அடையாளம் தெரியாத தொலைபேசி எண்ணிலிருந்து ஜர்னைல் சிங்கிற்கு அழைப்பு வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமாகவும் மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தாங்கள் லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ரூ.7 கோடி பெற்றுத் தர வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.
அவ்வாறு பணம் வழங்கப்படாவிட்டால் அரவிந்த் கெஜ்ரிவாலையும், அவரது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலையும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. ஜர்னைல் சிங் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் மொஹாலி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மிரட்டல் விடுத்த நபர் பயன்படுத்திய தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V