சேலம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- 27.95 லட்சம் வாக்காளர்கள்!
சேலம், 12 நவம்பர் (ஹி.ச.) இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறி
Salem


சேலம், 12 நவம்பர் (ஹி.ச.)

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

2027 ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நவம்பர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, சேலம் மாவட்டத்தில் 13,88,234 ஆண் வாக்காளர்களும், 14,06,753 பெண் வாக்காளர்களும், 328 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 27,95,315 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் 18,519 பேர் அதிகமாக உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6-ஐயும், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும், முகவரி மாற்றம் மற்றும் பெயர் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-ஐயும் பயன்படுத்தலாம்.

மேலும், 2027 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் இளைஞர்கள் புதிய வாக்காளர்களாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

அதுமட்டுமின்றி, 2027 ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயதை நிறைவு செய்ய உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களும் முன்கூட்டியே படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம். அவர்களது விண்ணப்பங்கள் உரிய தகுதி நாளின்படி பரிசீலிக்கப்படும்.

இதற்காக நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிப்பதுடன், Voters.eci.gov.in, elections.tn.gov.in இணையதளங்கள் மற்றும் Voter Helpline செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தினார்.

மேலும் டிசம்பர் 11ஆம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V