Enter your Email Address to subscribe to our newsletters

குஜராத், 13 நவம்பர் (ஹி.ச.)
குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் ஷிலாஜ் சர்க்கிள் பகுதியில் கடந்த புதன்கிழமை காலை 7 மணியளவில், அதிவேகமாக வந்த ரேஞ்ச் ரோவர் கார், ரேபிடோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 35 வயதான ஹர்ஷ்பாய் புர்பியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரேபிடோ ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார்.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ராகவேந்திர குஷ்வாஹா, பாபுநகர் தொகுதி பாஜக எம்எல்ஏ தினேஷ்சிங் குஷ்வாஹாவின் உறவினர் ஆவார். இவர் தனது நான்கு நண்பர்களுடன் காந்திநகர் மாவட்டம் கலோல் பகுதியில் இரவு முழுவதும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து ராகவேந்திராவும் அவரது நண்பர்களும் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், காரின் பதிவெண்ணைக் கொண்டு விசாரணை நடத்தி ஓட்டுநரை அடையாளம் கண்டனர்.
இதற்கிடையே, விபத்துக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தாமல், காவல் நிலையத்திலேயே பிணையில் விடுவித்து போலீசார் அவருக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், விபத்து நடந்த 40 மணி நேரத்திற்கும் மேலாகியும், போபால் போலீசார் ராகவேந்திர குஷ்வாஹாவைக் கைது செய்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P