Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 13 நவம்பர் (ஹி.ச.)
இந்தியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 318.56 புள்ளிகள் சரிந்து 81,592.45 புள்ளிகளில் நிறைவடைந்தது.
அதேபோல், தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 155.05 புள்ளிகள் சரிந்து 25,144.30 புள்ளிகளில் முடிவடைந்தது.
கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று சரிவைச் சந்தித்துள்ளது. அக்டோபர் மாதத்திற்கான சில்லறைப் பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்தது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது, முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்தது உள்ளிட்ட காரணங்களால் சந்தையில் விற்பனை அழுத்தம் அதிகரித்தது.
குறிப்பாக வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதனால் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரு முக்கியக் குறியீடுகளும் சரிவுடன் நிறைவடைந்தன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P