Enter your Email Address to subscribe to our newsletters

லே, 13 நவம்பர் (ஹி.ச.)
லடாக்கில் உள்ள தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லடாக் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், லே பகுதியில் போராட்டக் களத்தில் இருந்த சோனம் வாங்சுக்கை போலீசார் அங்கிருந்து அகற்றினர்.
இதன் தொடர்ச்சியாக, லே மாவட்ட கூடுதல் மாவட்ட ஆட்சியர், சோனம் வாங்சுக்கின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த அறிக்கை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 163ஆவது பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, அனுமதியற்ற பேரணி, ஊர்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யவோ, அதில் பங்கேற்கவோ சோனம் வாங்சுக்கிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P