Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 13 நவம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் டாக்டர் சரண்யா. இவர் நேற்று அரகண்டநல்லூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சரண்யாவின் உடலை மீட்டனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியிலும், சக மருத்துவர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரண்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? அல்லது குடும்பப் பிரச்சினை ஏதேனும் இருந்ததா? என்பது குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் சக மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் முழுமையான விசாரணைக்குப் பிறகே அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA