சரத் பவாரைச் சந்தித்த சஞ்சய் சிங்! தொகுதி மறுவரையறை மசோதா குறித்து முக்கிய கருத்து!
மும்பை, 13 நவம்பர் (ஹி.ச.) தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் உடல் நலக்குறைவால் பாதிகாப்பட்டுளார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இன்று அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். அங்கு நாடாளுமன்ற
Sanjai sing


மும்பை, 13 நவம்பர் (ஹி.ச.)

தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் உடல் நலக்குறைவால் பாதிகாப்பட்டுளார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இன்று அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

அங்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர், வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்தார்.

அந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங், கடந்த சில நாட்களாக உடல்நலப் பாதிப்பில் இருந்த சரத் பவார் தற்போது நல்ல முன்னேற்றத்துடன் இருப்பதாகக் கூறினார்.

அப்போது, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்று சரத் பவார் கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள், வாக்குத் திருட்டு புகார்கள், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை (SIR) மற்றும் டெல்லியில் நீக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பான விவரங்களையும் சரத் பவாரிடம் எடுத்துரைத்ததாகக் கூறினார்.

மகாராஷ்டிர அரசியல் சூழல் மற்றும் மேலவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாகவும், இந்தச் சந்திப்பு மிகவும் சுமுகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சரத் பவார் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளைத் தீவிரமாக எழுப்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேசிய அவர், அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான பெரும்பான்மை அரசிடம் இல்லை என்று விமர்சித்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,

தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அதனைச் செயல்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். தொகுதி மறுவரையறைக்கு முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, உத்தரப் பிரதேசத்தில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியும் அமைத்துள்ள கூட்டணி குறித்துக் கருத்து தெரிவித்த சஞ்சய் சிங்,

இரு கட்சிகளுக்கும் தனித்தனி அரசியல் பார்வைகள் இருப்பதாகக் கூறினார். இறுதியில் மக்கள்தான் தேர்தலில் தங்களது முடிவை வெளிப்படுத்துவார்கள் என்றார்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, ராமர் கோயிலுக்காகப் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துப் பிரச்சினைகளையும் மக்கள் கவனித்து வருவதாகவும், இறுதியில் உத்தரப் பிரதேச வாக்காளர்களே தங்களது தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V