திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஒரே நாளில் ரூ.4.92 கோடி உண்டியல் வசூல்
திருமலை, 14 நவம்பர் (ஹி.ச.) திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளன. இதனால், கோ
A


திருமலை, 14 நவம்பர் (ஹி.ச.)

திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளன. இதனால், கோவிலுக்கு வெளியே சிலாதோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு வந்துள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 15 மணி நேரம் ஆகிறது.

பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவஸ்தான அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்து 124 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

அவர்களில் 32 ஆயிரத்து 298 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியல் மூலம் ரூ.4 கோடியே 92 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

மேலும், 4 லட்சத்து 3 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்கள் என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA