ராகுல் காந்தியின் வாக்குறுதிகள் வெறும் வெற்று பேச்சுகள் - பண்டி சஞ்சய் விமர்சனம்
ஐதராபாத், 14 நவம்பர் (ஹி.ச.) ராகுல் காந்தி அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வெற்று பேச்சுகளாகவே உள்ளன என்று மத்திய உள்துறை இணை மந்திரி பண்டி சஞ்சய் விமர்சித்துள்ளார். ஐதராபாத்தில் கிக்வொர்க்கர்களுக்கு நலத்திட்டம் அறிவித்த காங்கிரஸ் மூத்த
A


ஐதராபாத், 14 நவம்பர் (ஹி.ச.)

ராகுல் காந்தி அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வெற்று பேச்சுகளாகவே உள்ளன என்று மத்திய உள்துறை இணை மந்திரி பண்டி சஞ்சய் விமர்சித்துள்ளார்.

ஐதராபாத்தில் கிக்வொர்க்கர்களுக்கு நலத்திட்டம் அறிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அவர் கடுமையாக விமர்சித்தார். கிக்வொர்க்கர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்குவதாக கூறுவது பெரிய நகைச்சுவை என்றும் கேலி செய்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு காங்கிரஸ் அறிவித்த 6 உத்தரவாதங்களும் இதுவரை நிறைவேற்றப்படாமல் வெறும் வாக்குறுதிகளாகவே உள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வரங்கல், காமாரெட்டி பிரகடனங்களை செயல்படுத்தியது என்ன ஆனது என்பதற்கு காங்கிரஸ் கட்சி மக்களிடம் பதில் அளிக்க வேண்டும். பழைய வாக்குறுதிகளையே நிறைவேற்றாமல், தற்போது புதிதாக மற்றொரு வாக்குறுதியை அளிப்பது மக்களை திசைதிருப்பும் செயலாகும்.

தெலுங்கானாவில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ஆரோக்கியஸ்ரீ மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கே போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. அரசு ஊழியர்கள், ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டைகள்கூட மருத்துவமனைகளில் முறையாக செயல்படுவதில்லை.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள மருத்துவ திட்டங்களையே முறையாக செயல்படுத்த முடியாத நிலையில், புதிதாக கிக்வொர்க்கர்களுக்கு காப்பீடும், மருத்துவ பாதுகாப்பும் வழங்குவதாக காங்கிரஸ் கூறுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்? என்றும் பண்டி சஞ்சய் கேள்வி எழுப்பினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA