தேனியில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் – வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கிய அமைச்சர்
தேனி, 14 நவம்பர் (ஹி.ச.) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு
Minister


தேனி, 14 நவம்பர் (ஹி.ச.)

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு

தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது ஓட்டத் திறனை வெளிப்படுத்தினர்.

தேனி அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்போட்டி 17 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் தொடங்கி கொடுவிலார்பட்டி வரை சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இலக்கை அடைவதற்காக உற்சாகத்துடன் ஓடினர்.

போட்டி தொடங்கியது முதல் இறுதிக்கட்டம் வரை பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டார்.

மாரத்தான் போட்டியில் நான்கு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

அதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.5,000, இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3,000, மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2,000 என பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி அமைச்சர் ஊக்கப்படுத்தினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V