Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 15 நவம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கேரள மாநிலத்தைச் சேர்ந்த கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் முருகன் என்ற வெள்ளத்துரை (53), திருமலைசாமி (42), முருகன் (51) மற்றும் லாரி ஓட்டுநர் திம்மராஜ் (26) ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் கழிவுகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன,
அவற்றைக் கொட்டுவதற்கு யார் ஏற்பாடு செய்தது, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்த இரண்டு நாட்களுக்குள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P