முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் குறித்து திண்டுக்கல் லியோனி கடும் விமர்சனம்
சென்னை , 15 நவம்பர் (ஹி.ச.) தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் டெல்லி பயணத்தை விமர்சித்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் முன்னாள் தலைவர் திண்டுக்கல் லியோனி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக சட
லியோனி


சென்னை , 15 நவம்பர் (ஹி.ச.)

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் டெல்லி பயணத்தை விமர்சித்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் முன்னாள் தலைவர் திண்டுக்கல் லியோனி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக சட்டமன்ற உறுப்பினரால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து டெல்லியில் முறையிட்டுள்ளதாகவும், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவே முதலமைச்சர் விஜய் டெல்லி செல்வதாக விமர்சித்துள்ள அவர், மேகதாது அணை விவகாரம் மற்றும் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஆகியவை பெயரளவிலான காரணங்கள்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கொளத்தூரில் கேக் ஊட்டிய முதலமைச்சருக்கு அதே கொளத்தூர் மக்கள் விரைவில் பதிலடி கொடுப்பார்கள் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டர் ஒருவரின் திடீர் வருகையைக் கண்டு முதலமைச்சர் அங்கிருந்து சென்ற காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்து மக்கள் சிரித்து மகிழ்ந்ததாகவும் திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam